Ultimate magazine theme for WordPress.

தீவிரமடைந்த கொரோனா பாதிப்பு… இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐ.சி.யூ-வில் அனுமதி

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்(55) கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து லண்டன் செயின்ட் தாமஸ் மருத்துவமனை டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

கொரோனாவிற்கு சிகிச்சை எடுத்து வந்த போதும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக தனது பணியை தொடர்ந்து செய்து வந்தார். தற்போது அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்த தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப்பை தேவைப்பட்டால் நிர்வாகத்தை கவனிக்குமாறு போரிஸ் ஜான்சன் கேட்டுக் கொண்டுள்ளார். போரிஸ் ஜான்சன் மீண்டும் உடல்நலம் பெற வேண்டுமென்று பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரெம்ப் உள்ளிட்ட அரசியில் தலைவர்கள் தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.