EBM News Tamil
Leading News Portal in Tamil

அமெரிக்காவில் தொடங்கியது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்

சர்வதேச யோகா தினம் அமெரிக்காவில் நேற்று தொடங்கியது. பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி மற்றும் தியான நிகழ்ச்சி கள் நடைபெற்றன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்தது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் அன்றைய தினம் யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நான்காவது ஆண்டாக வரும் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படு கிறது.
இதை முன்னிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன் கேபிடால் ஹில் கட்டிடத்தில் (அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் இடம்) நேற்றுமுன்தினம் சர்வ தேச யோகா தின கொண்டாட்டம் தொடங்கியது. இதில் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அப்போது சிறந்த யோகா ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலின்படி அவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். அத்துடன் தியானமும் செய்தனர்.
கேபிடால் ஹில் கட்டிடத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக மக்கள் திரண்டனர். இது ஆண்டுதோறும் யோகாவை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதைக் காட்டுகிறது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சிங் சர்னா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, ‘‘கடந்த 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி 36.7 மில்லியன் பேர் அமெரிக்காவில் யோகா பயிற்சியில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது’’ என்றார்.
இதேபோல் நியூயார்க் நகரில் சுதந்திர தேவி சிலை பின்னணி யில் கவர்னர்கள் தீவு பகுதியில் கடந்த சனிக்கிழமை இந்திய தூதரகம் சார்பில் யோகா தினக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பல்வேறு பின்புலங்களைக் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூர்ய நமஸ்காரம், பிரணாயாமம், யோகா ஆசனங்கள் மற்றும் தியான பயிற்சிகள் செய்தனர்.
யோகாவின் சிறப்புகள் குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதர் சந்தீப் சக்கரவர்த்தி எடுத்துரைத்தார். மேலும், மற்ற விஷயங்களை காட்டிலும் இந்தியா – அமெரிக்காவை யோகா வலுவாக இணைத்துள்ளது. இந்திய கலாச்சாரத்தை, உடல் – மனம் இரண்டையும் பாதுகாக்கும் யோகாவை அமெரிக்கர்கள் ஆர்வமுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.