Ultimate magazine theme for WordPress.

உங்களுக்கு விருப்பமான செய்திகளை இனி Twitter-ல் பார்க்கலாம்!

ட்விட்டர் பயனர்களின் டைம்லைனில் நிகழ்நேர செய்திகளை காட்சிப்படுத்த ட்விட்டர் திட்டமிட்டு வருகிறது!
பிரபல சமூக வலைதளமான ட்விட்டர், தங்களது பயனர்களின் டைம்லைனில் செய்திகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. பேஸ்புக் வலைதளத்தில் இந்த அம்சம் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், பேஸ்புக்கை காட்டிலும் மேம்பட்ட அம்சத்துடன் இந்த செய்தி இடல் வசதியினை புகுத்த ட்விட்டர் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் தெரிவிக்கையில், பயனர்களின் விருப்பங்களை அறிந்து அவர்களுக்கு விருப்பமான செய்திகளை அவர்களது கணக்கில் காட்சிப்படுத்தும் அம்சத்திற்கான வேலைகள் நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்த வசதி மூலம் பயனர்கள் தாங்களாவே தங்களுக்கு எவ்விதமான செய்தி வேண்டும் என்பதினையும் தீர்மாணித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த வசதியினை ட்விட்டரில் புகுத்த “Explore” என்னும் புதிய தாவலையும் தனது வலைப்பக்கத்தில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த தாவலை பயன்படுத்தி பயனர்கள் எளிதில் செய்திகளை படிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, WhatsApp, Facebook செயலிகளில் இருப்பது போல் twitter-லும் செய்திகள் அனுப்புவதில் என்கிரிப்படட் முறையினை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்தது.
சமீபத்தில் போஸ்பக்கத்தில் இருந்து பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதை அடுத்து பாதுகாப்பு செயற்கூறுகளை அனைத்து சமூக வலைதளங்களும் கடைபிடித்து வருகின்றன. அந்த வகையில் ட்விட்டரிலும் தன் பயனர்களின் தகவல்களை பாதுகாக்க பல அம்சங்களை ட்விட்டர் மேம்படுத்தி வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.