EBM News Tamil
Leading News Portal in Tamil

அடடா! Google-ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

கூகுள் இமேஜ் ஆப்ஷன் வழிமுறைகள் மற்றும் அதன் பயன்பாட்டை கூகுள் தேடுதலத்தின் எப்படி உபயோகித்து பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். இணையத்தையும் கூகுளையும் பிரிக்க முடியாத அளவு கூகுள் பயன்பாடு இருந்து வருகிறது. அமெரிக்காவில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேடுப்பொறி தொழில்நுட்பமாக கூகுள் செயல்பட்டு வருகிறது. முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும்.

ஏதாவது சந்தேகம் என்றாலும் சரி, எதையாவது படித்து அறிந்துக் கொள்ள வேண்டுமானாலும் சரி நமக்கு கைக் கொடுப்பது கூகுள் தான். மனிதனின் இரண்டாவது மூளையாக செயல்பட்டு வருகிறது. அனைத்து பயன்பாடுகளும் கூகுளில் ஆகச் சிறந்த பயன்பாட்டை அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்துக் கொண்டே வருகிறது.

கூகுளில் ஏதாவது தேட வேண்டும் என்றால் அந்த வார்த்தையை டைப் செய்து தேடி விடலாம். இதுவே நமக்கு ஒரு விலங்கின் உருவம் அதன் படம் மட்டும் உள்ளது அது என்ன என்று தெரிய வேண்டும் என்றால் அதை எப்படி தேடுவது என சந்தேகம் இருக்கலாம்.

ஒருசில வார்த்தைகளை தேடவேண்டும் என்றால் அதன் சில எழுத்துகளை டைப் செய்தால் போதும் கூகுள் நம் தேடல் பரிந்துரைகளை எடுத்துக் காட்டி உதவும். அதுவே நமக்கு ஒருசிலவற்றின் புகைப்படங்கள் இருந்து அதுகுறித்து தெரிய வேண்டும் என்றால் அதை வைத்து எப்படி தேடி கண்டு படிக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.