வேலுமணிக்கு எதிராக புகார்கள் விசாரிக்கப்படும் என்று தமிழக அரசு இன்று தெரிவித்துள்ள நிலையில், அடுத்த புகார் சேலத்தை நோக்கி திரும்பி உள்ளது.. அதற்கான ஒரு அறிவிப்புதான் சுற்றறிக்கையாக இன்று பறந்துள்ளது.
கடந்த முறை அதிமுக ஆட்சியில் அதிகம் பேசப்பட்டது எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புகள்தான்.. அதிலும் ஆட்சியின் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, அதிலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில், அதிலும் பயிர்க்கடன் உத்தரவுதான் மக்களிடம் பெரும் நன்மதிப்பை பெற்று தந்தது.
தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் 2021 ஜனவரி 31ம் தேதி வரை விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அதில் அறிவித்திருந்தார்.. இந்த அறிவிப்பில்தான் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.