Ultimate magazine theme for WordPress.

கோயம்பேடு மார்க்கெட்டில் நாளை முதல் இரு சக்கர வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அனுமதி…!

சென்னை கோயம்பேடு மார்கெட் பகுதியில் நாளை முதல் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள், காய்கறிகள் வாங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை கோயம்பேடு மார்கெட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, பொது மக்கள் மார்கெட் பகுதிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், சிறு வியாபாரிகளிடம் பொருட்களை வாங்க வேண்டும் என்று மாநகராட்சி கேட்டுக்கொண்டது.

மேலும், ஸ்விக்கி போன்ற ஆன்லைன் தளங்கள் வழியாகவும் தனி எண் மூலமாகவும் காய்கறிகளை ஆன்லைனில் வாங்கலாம். வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும், பொதுமக்கள் பலர் கோயம்பேட்டில் தினமும் குவிந்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.