EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனா ஊரடங்கு – உணவு வழங்க நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் என்னென்ன?

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உணவு மற்றும் ரேஷன் பொருட்களை வழங்க கட்டுப்பாடுகள் விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், ஏழைகளுக்கு உணவு வழங்குவது குறித்து அரசிடம் முன் அனுமதி பெறுவது என்பது நியாமற்றதாகவோ அல்லது பகுத்தறிவின்மையாகவே கருத முடியாது என தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், உணவு பொருட்களை ஏழைகளுக்கு நேரடியாக வழங்க அனுமதிக்காமல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஏழைகளுக்கு உணவு வழங்க நீதிபதிகள் புதிய நிபந்தனைகளை வகுத்துள்ளனர். அதன்படி,

1) உணவு வழங்குவது குறித்து 48 மணி நேரத்திற்கு முன்னதாக மாவட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

2) சமைத்த உணவுகளை வழங்கும் இடத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்; உணவு சமைத்தவர்களின் உடல்நிலை மற்றும் உணவின் தரம் குறித்து ஆட்சபோனை இல்லையென்றால் உணவு விநியோகிக்கப்படலாம்.3) கொரோனா பாதிப்பில் ‘ஹாட் ஸ்பாட்’ பகுதி என அரசு அறிவித்துள்ள இடங்களில் உணவு விநியோகிக்க கூடாது.

4) அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் உணவு வழங்கும் பணியை முடிக்க வேண்டும்; சூழ்நிலையை பொறுத்து 2 மணி நேரம் வரை கூடுதல் கால அவகாசம் வழங்கும் அதிகாரம் மாவட்ட அதிகாரிகளுக்கு உள்ளது.

5) உணவு வழங்கும் இடம் முன் கூடியே சுத்தப்படுத்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6) உணவு வழங்கும் இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும்

7) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி, வாகன ஓட்டுனர் மற்றும் 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்

8) உணவுகளை கொண்டு வரும்போது ஒரு வாகனத்தில் 3 பேருக்கு மேல் வர கூடாது.

9) ஏழைகளுக்கு உணவு வழங்கும் போது சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

10) உணவுகள் வழங்கும் போது அரசின் விதிகளை மீறாமல் இருக்க புதிய நிபந்தனைகளை விதிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

இந்த நிபந்தனை வகுத்த நீதிபதிகள் திமுக தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்.