Ultimate magazine theme for WordPress.

அரசு மருத்துவமனை பிணவறைகளில் உள்ள உரிமை கோரப்படாத சடலங்களை தகனம் செய்ய மனு – அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் பல்வேறு காரணங்களால் மரணமடையும் நபர்களின் உடல்கள், அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டு, 10 நாட்களுக்கு பின் அவற்றை உரிய நடைமுறைகளை பின்பற்றி புதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோல, அடையாளம் காணப்படாத, உரிமை கோரப்படாத உடல்களை மயானங்களில் புதைக்கப்படுவதால், இடப்பற்றாக்குறை ஏற்படுவதாகவும், உடல்களை நீண்ட நாட்கள் மருத்துவமனையில் வைத்திருப்பதன் மூலம், நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாலும், இந்த சடலங்களை தகனம் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஜீவாத்மா கைங்கர்ய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத உடல்களை தகனம் செய்ய பிற மாநில நீதிமன்றங்கள் அனுமதியளித்துள்ளதாகவும், தமிழகத்தில் வழக்குகளை காரணம் காட்டி, புதைக்க மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தகனம் செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட சடலங்களின் முடி, ரோமம், நகம் போன்றவை எடுத்து பாதுகாக்கப்படுவதால், அடையாளம் காண்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது எனவும், தகனம் செய்வதால் அதிக செலவும் ஏற்படாது என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.