Ultimate magazine theme for WordPress.

கப்பல் மூலம் சீனாவுக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்

வெளிநாட்டு வர்த்தக (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1992-ன் படி, செம்மரக் கட்டைகளை வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து கப்பல் மூலம் சீனாவுக்கு செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 8-ம் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட கன்டெய்னர்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். கன்டெய்னரில் ரப்பர் ஹைட்ராலிக் குழாய் என லேபிள் ஒட்டப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்து சோதனை நடத்தியதில் அதில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. 11.75 டன் எடையுள்ளஅந்த செம்மரக் கட்டைகளின் மதிப்பு ரூ.5.28 கோடியாகும். அவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்தக் கன்டெய்னரை ஏற்று மதி செய்வதற்காக சுங்கத் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களும் போலியானவை என தெரியவந்துள்ளது. இதுகுறித்து, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்ற னர்.

Leave A Reply

Your email address will not be published.