Ultimate magazine theme for WordPress.

கதம் கதம்: மூடியது மூடியது தான்: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே முடியாது: முதல்வர்!

இனி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே முடியாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டமும், அதன் விளைவாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலும் தான். இறுதியில், என்ன ஆச்சு, ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு தான் போடப்பட்டுள்ளது. இதற்காக தானே தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். எனினும், ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டபேரவைக் கூட்டம் இன்று துவங்கியது.
இதில், எதிர்கட்சித் தலைவரான திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையானது மாசுக் கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளை மீறியதற்காக செலுத்தப்பட்ட அபராதத் தொகை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதா? இல்லை அதன் நிலை தான் என்ன என்பது குறித்த கேள்வியும் எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், இனி யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே முடியாது. ஆலை இயங்குவதற்கான உரிமங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இனி மக்கள் யாரும் போராட வேண்டாம். மக்கள் தங்களது உரிமைக்காக போராடுவதற்கு எந்தவித தடையும் இல்லை.
நாட்டிலேயே அதிகளவில் போராட்டங்கள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கையில் உருட்டுக்கட்டைகள், பெட்ரோல் குண்டுகளுடன் வந்தவர்கள் என்ன பொதுமக்களா? சமூகவிரோதிகள் தான் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று தனது விரிவான பதிலை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.