Ultimate magazine theme for WordPress.

நான் செஞ்சது தப்பு தான்.. தோனியை கண்டமேனிக்கு திட்டிய மூத்த வீரர்.. பரவும் வைரல் வீடியோ!

மும்பை : தோனியின் ஆரம்ப நாட்களில் ஒரு போட்டியில், அவரை கடுமையாக திட்டினார் வேகப் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. அந்த வீடியோ அவ்வப்போது தோனி ரசிகர்கள் மத்தியில் பரவும். அப்போதெல்லாம் அவர்கள் நெஹ்ராவை திட்டித் தீர்ப்பார்கள்.

தோனி விக்கெட் கீப்பராக 2004இல் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அதன் பின் 2005இல் பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் விசாகப்பட்டினம் போட்டியில் அவர் அடித்த சதத்தின் மூலம் தான் அணியின் நிரந்தர விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் ஆக மாறினார்.

அதே பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் தான் ஆஷிஷ் நெஹ்ரா, தோனியை திட்டிய சம்பவமும் நடந்தது. இது பற்றி பலரும், நெஹ்ரா, தோனியை திட்டிய அதே போட்டியில் தான், தோனி சதம் அடித்து தன்னை நிரூபித்தார் என கூறுவதுண்டு.

ஆனால், அதே தொடரில் தோனி சதம் அடித்த பின் நடந்த வேறு ஒரு போட்டியில் தான் ஆஷிஷ் நெஹ்ரா தோனியை திட்டி இருந்தார். ஷாஹித் அப்ரிடி கொடுத்த கடினமான கேட்ச்சை விக்கெட் கீப்பர் தோனி தவறவிட்டார். அதைக் கண்டு கோபமடைந்த நெஹ்ரா ஹிந்தியில் கடுமையான சொற்களை பயன்படுத்தி திட்டி இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.