EBM News Tamil
Leading News Portal in Tamil

கால்பந்து: இந்தியா அசத்தல்

ஜோர்டன்: ஆசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஜோர்டனில் நடக்கும் ஐந்தாவது மேற்கு ஆசிய கால்பந்து தொடரில் (16 வயது) இந்திய அணி பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஜோர்டனை (4–0) வென்ற இந்தியா அடுத்து ஜப்பானிடம் (1–2) தோற்றது. மூன்றாவது போட்டியில் ஆசிய சாம்பியன் ஈராக்கை (1–0) வீழ்த்தியது.
நான்காவது போட்டியில் இந்தியா, ஏமன் அணிகள் மோதின. போட்டியின் 38வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்பிரீத் சிங் தலையால் முட்டி கோல் அடித்தார்.
இரண்டாவது பாதி துவங்கிய 2வது நிமிடம் இந்தியாவின் டெமெல்லோ, தலையால் முட்டி கோல் அடிக்க இந்தியா 2–0 என முந்தியது.அடுத்த நிமிடம் (48வது) ரோகித் தானு தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சமீபத்திய 20 வயதுக்குட்டோருக்கான கோடிப் கோப்பை தொடரில் இந்திய அணி, வலிமையான அர்ஜென்டினாவை வீழ்த்தியது. தற்போது 16 வயது அணி வலிமையான ஈராக் மற்றும் ஏமன் அணிகளை அடுத்தடுத்து வென்று காட்டியது.