Ultimate magazine theme for WordPress.

மூன்று மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த வெற்றி: கண்ணீர் விட்டு அழுத ஆண்டி முர்ரே

3 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த வெற்றியின் மூலம் வாஷிங்டன் ஓபன் டென்னிஸில் காலிறுதிப் போட்டியில் நுழைந்திருக்கிறார் ஆண்டி முர்ரே.
வாஷிங்டன் ஓபன் டென்னிஸில் ரோமானிய வீரர் மாரியஸ் கோபிலை வெள்ளிக்கிழமை எதிர்கொண்டார் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே.
இதில் 6 -7, 6 -3, 7 – 6 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் இந்த ஆட்டம் நீடித்தது.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, கிடைத்த வெற்றி என்பதால் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த முர்ரே அதன்பின் களத்தைவிட்டு வெளியே செல்லாமல். தனது நாற்காலியில் உட்கார்த்து அழத் தொடங்கிவிட்டார்.
சுமார் 1 நிமிடத்துக்கும் மேலாக முர்ரே அழுது கொண்டிருந்தார். பின் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே விடை பெற்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஆண்டி முர்ரே மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.