Ultimate magazine theme for WordPress.

அணிக்குள் நான் வருவதை அவர்கள் விரும்பவில்லை ஏன் தெரியுமா? – உஸ்மான் கவாஜா வேதனை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஒருநாள் அணியில் தன்னைத் தேர்வு செய்யாதது தனக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது என்று உஸ்மான் கவாஜா வருந்தியுள்ளார்.
இது குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவுக்காக உஸ்மான் கவாஜா கூறியதாவது:
உள்ளபடியே கூற வேண்டுமெனில் நான் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளேன். ஜஸ்டின் லாங்கரிடமும் பேசினேன், அணித்தேர்வுக்குழுவினரிடத்திலும் பேசினேன். ஆனால் சில விஷயங்களை நாம் கட்டுப்படுத்த முடியாது. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் நிறைய ரன்களைக் குவித்தேன், குறிப்பாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில்.
இப்போதைக்கு அணியில் நான் வருவதை அவர்கள் விரும்பவில்லை, காரணம் என்னவெனில் ‘என்னை அணிக்குள் அவர்கள் விரும்பவில்லை’ என்பதே. என்னுடைய சிகப்புப் பந்து ரெக்கார்டை விட ஒருநாள் கிரிக்கெட்டில்தான் நான் சிறப்பாக ஆடியுள்ளேன். சில வேளைகளில் விஷயங்கள் ஒத்துப்போவதில்லை.
ஜஸ்டின் லாங்கரிடம் பேசினேன், அவர் தெளிவுபடுத்தினார். எனவே நான் தலையைத் தொங்கப்போட்டு கடுமையாக உழைக்க வேண்டும் அவ்வளவே.
குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் நான் தொடக்க வீர்ராகக் களமிறங்கி வருகிறேன். எனக்கு தொடக்கத்தில் இறங்க மிகவும் பிடிக்கும். அந்த ரோல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 3ம் நிலையில் இறங்க விரும்புகிறேன். எதுஎப்படியிருந்தாலும் டாப் 4ற்குள் இறங்கவே விரும்புகிறேன்.

Leave A Reply

Your email address will not be published.