Ultimate magazine theme for WordPress.

FIFA 2026 உலகக் கோப்பை போட்டிகள் எங்கு நடைபெறும்!

FIFA 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் US, கனடா மற்றும் மெக்ஸிகோ-வில் நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது!
பெரும் ஆரவாரத்துடன் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைப்பெறுவுள்ளது. கால்பந்தாட்ட ரசிகர்கள் வரும் போட்டிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் வரும் 2026-ஆம் உலக கோப்பை போட்டிகள் US, கனடா மற்றும் மெக்ஸிகோ-வில் நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் 2022-ஆம் ஆண்டு கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நடைப்பெறவுள்ள ரஷ்ய உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில், ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன. நாளை இரவு 8.30 மணியளவில் (இந்திய நேரப்படி காலை 6.30 மணியளவில்) இந்த போட்டி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் இந்த உலக கோப்பை தொடரில் நாளை துவங்கி ஜூலை மாதம் 15-ம் தேதி வரை 64 ஆட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக 11 நகரங்களில் 12 மைதானங்கள் தேர்வுசெய்யப்பட்டு தயார்படுத்தப் பட்டுள்ளன.
கால்பந்து திருவிழாவை எதிர்நோக்கி பல்வேறு நாடுகளின் அணிகள் மற்றும் ரசிகர்கள் ரஷ்ய படையெடுத்துள்ளனர். இதனால் மாஸ்கோ நகரமே திருவிழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கின்றது.
போட்டிகளை காண சுமார் ஒரு கோடி ரசிகர்கள் மாஸ்கோவில் திரண்டுள்ளனர். பாதுகாப்பு நலன் கருதி நகரெங்கிலும் 30 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.