Ultimate magazine theme for WordPress.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 347 ரன்கள் குவிப்பு!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்துள்ளது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய் 105(153) மற்றும் ஷிகர் தவான் 107(96) பலமான அஸ்திவாரத்தினை ஏற்படுத்தினர். இவர்களையடுத்து களமிறங்கிய ராகுல் 54(64) ரன்களில் வெளியேறினார். எனினும் பிறகு வந்த வீரர்கள் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 78 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 347 ரன்கள் குவித்துள்ளது.
தற்போது ஹார்டிக் பாண்டயா 10(21) மற்றும் அஸ்வின் 7(16) ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


ஆப்கானிஸ்தான் அணியினை பொருத்தமட்டில் இப்போட்டி வரலாற்று சிறப்புமிக்க போட்டியாகும். காரணம் இப்போட்டி ஆப்கான் அணியின் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.
இப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி காயம் காரணமாக விளையாடவில்லை, அவருக்கு பதிலாக ரஹானே தலைமை பொருப்பினை ஏற்று விளையாடுகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.