Ultimate magazine theme for WordPress.

ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் 4 புதிய அணிகள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் ஏற்கெனவே உள்ள 12 அணிகளுடன் மேலும் 4 அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
ஸ்காட்லாந்து, யு.ஏ.இ.அணிகள் முறையே 13 மற்றும் 14ம் இடத்தில் நுழைக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்து, நேபாள் ஆகிய அணிகள் இன்னும் 4 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடிய பிறகு தரவரிசையில் சேர்க்கப்படுவார்கள். ஏனெனில் தரவரிசைப்பட்டியலில் இணைய குறைந்தது இவ்வளவு ஒருநாள் சர்வதேச போட்டிகள் ஆடியிருக்க வேண்டியது நிபந்தனையாகும்.
இந்த புதிய அணிகளின் சேர்க்கையினால் மேலே உள்ள 12 அணிகளின் தரவரிசை நிலைகளில் மாற்றம் ஏற்படாது.
இந்த 4 அணிகள் சேர்க்கப்பட்டிருப்பதால் இவற்றுடன் ஆடும் ஒருநாள் போட்டிகளும் இனி தரவரிசைப் புள்ளிகள் கணக்கீட்டில் சேர்த்து கொள்ளப்படும்.
கடந்த ஆண்டு ஐசிசி உலக கிரிக்கெட் லீக் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதன் மூலம் நெதர்லாந்து அணி ஒருநாள் அந்தஸ்து பெற்றது.
ஸ்காட்லாந்து அணி 28 புள்ளிகளுடன் 13வது இடத்திலும், யு.ஏ.இ. 18 புள்ளிகளுடன் 14ம் இடத்திலும் உள்ளன.
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உள்ள அணிகள் வருமாறு:
1. இங்கிலாந்து (125 புள்ளிகள்)
2. இந்தியா (122)
3. தென் ஆப்பிரிக்கா (113)
4. நியூஸிலாந்து (112)
5. ஆஸ்திரேலியா (104)
6. பாகிஸ்தான் (102)
7. வங்கதேசம் (93)
8. இலங்கை (77)
9. மே.இ.தீவுகள் (69)
10. ஆப்கான் (63)
11. ஜிம்பாப்வே (55)
12. அயர்லாந்து (38)
13. ஸ்காட்லாந்து (28)
14. யு.ஏ.இ. (18)

Leave A Reply

Your email address will not be published.