Ultimate magazine theme for WordPress.

கிரிக்கெட் வீரர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை!!

கிரிக்கெட் வீரர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் கைக்கடிகாரத்தையும் பயன்படுத்தக்கூடாது என ஐசிசி ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 184 ரன்களில் ஆட்டம் இழந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் இருவர் கையில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் அணிந்திருந்தனர்.
முன்னதாக, கிரிக்கெட் போட்டி விதிகளின்படி ஸ்மார்ட் வாட்ச் அணிவது தடைசெய்யப்பட்டதாகும். அப்படியே அணிந்திருந்தாலும் அந்த வாட்சை அணைக்கப்பட்டிருக்க வேண்டும். செய்திகளை அளிக்கும் எந்த ஒரு கருவியையும் வீரர்கள் பந்தயத்தின் போது அணிந்திருந்தால் அதன் மூலம் மேட்ச் ஃபிக்ஸிங் நடக்கலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்படுள்ளது.
இதை தொடர்ந்து, பாகிஸ்தான் வீரர்கள் அணிந்திருந்த ஆப்பிள் ஸ்மார்ட்சை நீக்குமாறு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. “ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் மூலம் எந்த ஒரு தொலைபேசி அல்லது மொபைலை தொடர்பு கொள்ள முடியும். அதுமட்டும் இன்றி wi-fi வசதி மூலம் செய்திகளை எளிமையாக அனுப்பலாம் என்பதால் இந்த வகை வாட்ச்-ஐ கிரிகெட் வீரர்கள் அணியக்கூடாது என்பதை பாகிஸ்தான் வீரர்களுக்கு கூறியது அதை நீக்கிவிட்டதாகவும் ஐசிசி ஊழல் தடுப்புத்துறை தெரிவித்துள்ளது!

Leave A Reply

Your email address will not be published.