EBM News Tamil
Leading News Portal in Tamil

மில்லியன் கணக்கானவர்கள் வறுமையில் உணவின்றி தவிப்பார்கள் – முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்..!

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால், மில்லியன் கணக்கான மக்கள் வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்படுவார்கள் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் துவ்வுரி சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

மந்தன் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த கொரோனாவுக்கு பிந்தைய நாட்டின் சவால்கள் குறித்த வெபினாரில் கலந்துகொண்ட அவர், “மற்ற நாடுகளை விட கொரோனாவின் சவால்களை இந்தியா சிறந்த முறையில் எதிர்கொண்டு வருகிறது. ஆனால் அது ஆறுதலான விஷயம் இல்லை. இது பொருளாதாரத்தில் பலம் கொண்ட நாடு இல்லை என்பதால், லாக்டவுன் நீட்டிப்பை இந்தியர்களால் தாங்க முடியாது. மில்லியன் கணக்கானவர்கள் வாழ்க்கையை நடத்த தேவையான வழியின்றி வறுமையின் உழல நேரிடும். அதைச் சமாளிப்பது இப்போதைய சவாலைவிடவும் கடினமானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.