EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனா சூழல்: சிவகங்கையில் இலவச சிகிச்சையளிக்கும் மருத்துவரின் சேவைக்கு குவியும் பாராட்டு!

கொரோனா வைரஸ் காலத்தில் மக்களின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இலவச மருத்துவம் அளிக்கும் தனியார் மருத்துவமனை மருத்துவரின் மனித நேய சேவையை சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வட மாநிலத்தை சேர்ந்த 13 பேர் மற்றும் சிகிச்சைக்கு வரும் பொது மக்களுக்கு இலவச மருத்துவம் பார்த்து வருகின்றார் தனியார் மருத்துமனை டாக்டர் செல்வராஜ். இவர் மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே மருத்துமனை வைத்து உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் எஸ்.டி.பிரிவு மாநில துணை தலைவராகவும் இருந்து வருகின்றார்.

தற்போது ஏற்பட்ட ஊரடங்கு சூழ்நிலையில் பொது மக்கள் பலர் வேலைக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர். இந்த இந்நிலையில், அவர்களின் வருமானம் இதை எல்லாம் யோசித்த செல்வராஜ் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட நாளிலிருந்து கடந்த ஒரு மாதமாக சிகிச்சைக்கு பணம் இல்லாமல் வருவபவர்கள் மற்றும் அவர்களின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இலவசமாக பார்த்து வருகின்றார்.

பணம் இல்லை என்று சொன்னால் கூட பணம் எல்லாம் வேண்டாம் நன்றாக உடம்பை பார்த்து கொள்ளுங்கள் என கூறி பணம் கொடுக்க வேண்டாம் என்கிறார். மேலும் அவர்களுக்கு மருந்து , மாத்திரைகள், ஊசிகளுக்கு எதுக்கு பணம் பெறுவதில்லை. இதே போல் கொரோனா வைரஸ் தாக்கத்தால் வட மாநிலத்தில் இருந்து வந்த 13 பேர் ஒரு தனியார் லாட்ஜில் தங்க வைக்கபட்டு உள்ளனர்.

அவர்களுக்கும் தொடர்ந்து இலவசமாக மருத்துவம் பார்த்து வருகின்றார். அவர்கள் இங்கிருந்து செல்லும் வரை இலவசமாக பார்த்து கொள்ளலாம் என்றும் அவர்கள் மருத்துவரீதியாக என்ன தேவையோ அனைத்து உதவிகளும் செய்யபடும் என தெரிவித்து உள்ளார்.

அவர்களும் அவ்வப்போது வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர். இது கூறித்து பொது மக்கள் கூறுகையில் சாதாரணமாக தலைவலி என்றால் தனியார் மருத்துமனை சென்றால் ரூ.500 முதல் ரூ.1000 செலவாகும். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலை கருத்தில் கொண்டு இலவசமாக பொது மருத்துவம் பார்க்கும் டாக்டர் செல்வராஜ்க்கு சமுக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகின்றது.ஆனால் இதை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாமல் எப்போதும் போல் அவர் வேலை செய்து வருகின்றார். இது குறித்து டாக்டர் செல்வராஜ் கூறும்போது பணம் என்பது ஒரு பொருட்டல்ல. தற்போது உள்ள சூழ்நிலை, மக்கள் வேலை செல்ல முடியாத சூழ்நிலை ஆகியவற்றை நான் நன்கு அறிவேன். ஒரு டாக்டராக என்னால் என்ன செய்ய முடியுமோ அதை தான் செய்தேன். இது ஒரு பெரிய விஷயமில்லை என்றார்.