பொருளாதாரத் திட்டம் குறித்து நிதியமைச்சர் வாக்குறுதியளித்து ஒரு மாதமாகிறது – ப.சிதம்பரம் கேள்வி
பொருளாதார நிர்மாணத் திட்டத்தை அறிவிப்பதாக நிதி அமைச்சர் வாக்குறுதியளித்து ஒரு மாதமாகிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதிய கடிதத்தில் குறு, சிறு தொழில்களை மீண்டும் தொடங்குவதற்கு ஒரு விரிவான திட்டத்தைப் பரிந்துரைத்திருக்கிறார். காங்கிரஸ் கட்சி அரசுக்குத் தருகின்ற ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கு இது சிறந்த உதாரணம்.
ஒரு பொருளாதார நிர்மாணத் திட்டத்தை விரைவில் அறிவிக்க இருப்பதாக நிதி அமைச்சர் வாக்குறுதி அளித்து இன்றுடன் ஒரு மாதமாகிறது! திட்டத்தைத் தான் காணவில்லை! காங்கிரஸ் கட்சியின் குறு, சிறு தொழில் திட்டத்தை அரசு ஏற்று அதனைச் செயல்படுத்த வேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.