Ultimate magazine theme for WordPress.

தேவையில்லா e-mail-கள் அனுப்பினால் 4 நாள் சிறைவாசம்!

தொடர் e-mail மூலம் இளம்பெண்ணை தொந்தரவு செய்த 19-வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், இளம்பெண் ஒருவருக்கு தொடர்ந்து தேவையில்லா மின்னஞ்சல்கள் வந்துள்ளது. இந்த மின்னஞ்சலில் பாலியல் ரீதியாக துன்புருத்தும் வகையில் செய்திகளை அந்த மர்ம நபர் பகிர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் தன் தந்தை உதவியுடன் ஐதாராபாத்தில் ஷி பிரிவில் புகார் அளித்துள்ளார்.
ஐதாராபாத் காவல்துறையின் ஷி பிரிவு என்பது, மகளிருக்கான பாதுகாப்பு செயல்களை புரிந்து வரும் சிறப்பு பிரிவாகும். இந்த பிரிவு குழந்தைகள் பாதுகாப்பிற்கான செயல்களையும் செய்து வருகின்றது.
இந்நிலையில் இந்த ஷி பிரவு அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரி P திலக் மணிகண்டா என்னும் 19-வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 7-ஆம் நாள் குற்றவாலியினை அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாலிக்கு 4 நாள் சிறைவாசம் மற்றும் ரூ.50 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.