Ultimate magazine theme for WordPress.

அரசாங்க வேலைக்கு இனி 42 வயது வரை அனுமதி: வயது வரம்பை உயர்த்திய ஹரியாணா அரசு

ஹரியாணா மாநிலத்தில் அரசுப் பணியில் சேர உயர்ந்தபட்ச வயதுவரம்பு 40லிருந்து 42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”அரசுப் பணியில் இணைவதற்கான உயர்ந்தபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டு அனைத்துத் துறைகளுக்கும் உரிய விதிமுறைகளோடு இதைப் பொருத்திக்கொள்ளுமாறு உத்தரவுகள் அனுப்பப்பட்டுள்ளன.
அரசாங்க பணியில் நுழைவதற்கு உயர் வயது வரம்புகளை உயர்த்துவது தொடர்பான தங்கள் பணியாளருக்கான விதிகளில் அதற்குண்டான தகுந்த அளவுகளில் இவ்வுத்தரவை பொருத்திக்கொள்ளுமாறு அனைத்து துறைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அரசுத் துறைகளைப் பொறுத்தவரை இது சம்பந்தமாக தனியே அமைச்சரவை, பொது நிர்வாகம், நிதித்துறை மற்றும் ஹரியாணா அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஹரியாணா பணியாளர் தேர்வுக்குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இந்த ஆண்டு மே 30 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனைத்து ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டன.
இச்சட்டம் உடனடியாக அமலுக்கு வரும்வகையில் தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறை நிர்வாகங்கள், அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அம்பாலா, ஹிசார், ரோதக் மற்றும் குர்கான் கோட்டங்களின் ஆணையர்கள், அனைத்து தலைமை அதிகாரிகள், மற்றும் நிர்வாக இயக்குநர்கள், கார்ப்பரேஷன்கள் மற்றும் பொதுத்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள், துணை ஆணையர்கள், உதவி கோட்ட அலுவலர்கள், மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் தலைமைச் செயலாளரின் ஒரு சுற்றறிக்கையாக இவ்வுத்தரவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.