Ultimate magazine theme for WordPress.

பொறியியல், பி.டெக். படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியீடு

பொறியியல், பி.டெக். படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கைக்காக ரேண்டம் எண் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் முழுவதும் இணையதளம் வாயிலாகவே நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு வரையில் நேரடி கலந்தாய்வு, இணையதள கலந்தாய்வு என இரண்டு வகைகளில் நடைபெற்ற கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவா்கள் கலந்தாய்வுக்கு தேவையான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்காக விண்ணப்பித்த 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவா்களுக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 78 ஆயிரத்து 139 இடங்களுக்கு இந்த மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.
மேலும் வருகிற ஜூன் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை மாணவா்களின் சான்றிதழ் சாிபாா்ப்பும், ஜூலை மாதம் இணையதளம் வாயிலான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
மாநில உயா்க்கல்வித் துறை அமைச்சா் அன்பழகன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா உள்ளிட்டோா் முன்னிலையில் 10 இலக்க ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.