ஒரு வாரமா ஏமாந்த பெண்: ரூ.7 லட்சத்த ஆட்டைய போட்ட பலே ஆன்லைன் திருடன்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒன் டைம் பாஸ்வேர்டை பயன்படுத்தி ஆன்லைனில் ரூ.7 லட்சத்தை ஆட்டைய போட்ட திருடனை போலீசார் வலைவிரித்து தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம், நேவி மும்பையைச் சேர்ந்தவர் தஸ்னீம் முஜாக்கர் மொதாக் (40). தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு ஒன்றை தொடங்கி அதில் ரூ.7 லட்சம் பணம் சேமித்து வந்துள்ளார். இவருக்கு ஆன்லைன் வங்கி தொடர்பாக எதுவும் தெரியாத நிலையில், வங்கியில் இருந்து போன் செய்வது போன்று, கடந்த மே மாதம் 17ம் தேதி ஒருவர் போன் செய்து பேசியுள்ளார். அப்போது அவர் பேசுகையில், டெக்னிக்கல் பிரச்சனை காரணமாக உங்களது டெபிட் கார்டு பிளாக் செய்யப்பட்டுவிட்டது. அதனை சரி செய்ய வேண்டும். அதற்காக உங்களது டெபிட் கார்டின் 15 டிஜிட் நம்பர், பெயர் மற்றும் 3 டிஜிட் சிவிவி நம்பரை தெரியப்படுத்துங்கள் என்று கூறி ஒருவர் பேசியுள்ளார்.
இதையடுத்து, அனைத்தையும், அந்த நபரிடம் தெரியப்படுத்த பெண்ணின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.6,98,973 பணத்தை அபேஸ் செய்துள்ளார். இதன் காரணமாக, வங்கிக்கணக்கிலிருந்து தனது பணம் காணாமல் போனது தொடர்பாக கடந்த 29ம் தேதிநெருல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், போலீசார் நடத்திய விசாரணையின் போது, அந்த மர்ம நபர் 3 சிம் கார்டுகளை பயன்படுத்தியுள்ளார் என்பதும், இதற்கு முன்னதாக மும்பை, குருகிராம், நொய்டா, பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் கைவரிசையை காட்டியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.