EBM News Tamil
Leading News Portal in Tamil

கர்நாடகா காங்கிரஸ் MLA சாலை விபத்தில் பலி

கா்நாடகா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினா் சித்து நைமா கௌடா சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கா்நாடகாவின் ஜம்காந்தி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சித்து நைமா கௌடா இன்று அதிகாலை ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். கோவா – பகல்கோட் சாலையில் துளசிகிரி என்ற இடம் அருகே சென்றுகொண்டிருந்த பொது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதையடுத்து, அவர் காரை நிறுத்த முயற்சித்துள்ளார். அவரது முயற்சி பயனின்றி கார் விபத்துகுள்ளது.
இந்த விபத்தில் கா்நாடகா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சித்து நைமா கௌடா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் ஜம்காந்தி தொகுதியில் போட்டியிட்ட சித்து அவரை எதிர்த்து நின்ற பா.ஜ.க.வைச் சோ்ந்த குல்கா்னி ஸ்ரீகாந்த் ஷரபோவாவை 2 ஆயிரத்து 795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது!
Tags:கர்நாடகாகோவாகார் விபத்துகாங்கிரஸ் எம்எல்ஏ பலிKarnataka