Ultimate magazine theme for WordPress.

மஞ்சள், வேப்பிலை, துளசி போட்டு ஆவி பிடிங்க கொரோனா பக்கத்தில கூட வராது

மதுரை: உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற சீன மருத்துவர்கள் பின்பற்ற சொல்வதும், இந்த ஆவி பிடிக்கும் முறையை தான். கொரோனா வைரஸ் முதலில் தாக்குவது, தொண்டையை தான். அதிலிருந்து தான் நுரையீரலை பதம் பார்க்க தொடங்கும். ஆகவே, கொரோனா வைரஸை தொண்டையிலேயே அழிக்கும் விதமாக ஆவி பிடிக்கும் முறையை பின்பற்ற தொடங்கிவிட்டனர். எனவே, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க ஆவி பிடித்தால் சாதாரண சளி தொந்தரவுகளும் நீங்கும் கொரோனா வைரஸ் தாக்கிவிடுமோ என்ற அச்சமின்றி இருக்கலாம்.

இன்றைக்கு பெரும்பாலான ஸ்டார் ஹோட்டலில் எல்லாம் ஸ்டீம் பாத் எனப்படும் நீராவி குளியல் என்பது கட்டாயம் இருக்கும். நீராவி குளியலை எடுத்துகொண்டால், நமது தோலின் மேற்புறத்திலுள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும் என்பதோடு, உடலையும் மனதையும் நாள் முழுவதும் புத்தணர்ச்சியை கொடுக்கும், அதோடு உற்சாகத்தை அளிக்கும் என்பதால் தான். இது சுமார் ஐம்பது ஆண்டுகளாக பழக்கத்தில் இருக்கும் நடைமுறை ஆகும்.

உண்மையில் நீராவி குளியல் என்பது வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பழக்க வழக்கமாகும். ஆனால், இதற்கு முன்னோடியாக இருப்பது ஆவி பிடிக்கும் முறையாகும். இது சமீபகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழக்கவழக்கம் கிடையாது. பழங்காலத்தில் இருந்தே தமிழர்கள் பின்பற்றி வரும் மிகச்சிறந்த மருத்துவ முறையாகும். ஒரு காலத்தில் ஒரே தும்மல், தொடர்ச்சியான இருமல், தலை வலி, தலை பாரம் என்றால் வீட்டு பெரியவர்கள், ஆவி பிடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பார்கள்.

இயற்கையான முறையில், தலைவலி, உடல் வலி, சளித் தொந்தரவு, இருமல் என எதுவாக இருந்தாலும் சரி முதலுதவியாக செய்து வருவது ஆவி பிடிப்பது தான். அதோடு, இயற்கையாக எளிய முறையில், நமது சருமத் துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகளையும் நோய்க் கிருமிகளையும் வெளியேற்ற நம் முன்னோர்கள் கையாண்ட மிக எளிய வைத்திய முறை தான் ஆவி பிடித்தல் ஆகும். இது பைசா செலவழிக்காமல் நம் முன்னோர்கள் கையாண்ட கை வைத்திய முறையாகும்.

Leave A Reply

Your email address will not be published.