திரைக்கலைஞர்கள் சரண்யா-பொன்வண்ணன் மகள் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சினிமா மற்றும் சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகர் பொன்வண்ணன். இவரது மனைவி சரண்யா பொன்வண்ணன், நிறைய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக திரை அம்மா என்றாலே அனைவருக்கும் சரண்யா பொன்வண்ணன் தான் நினைவுக்கு வருவார்.
பொன்வண்ணன் – சரண்யா தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்தவர் பிரியதர்ஷினிக்கு விக்னேஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதில் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இதையடுத்து நேற்று மாலை சென்னை மணப்பாக்கத்தில், பிரியதர்ஷினியின் திருமண வரவேற்பு நடந்தது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதற்கிடையே திருமண நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் முதலமைச்சர், மணமக்களுக்கு மரக்கன்றுகள் அடங்கிய பசுமைக்கூடையை பரிசாகக் கொடுப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.