Ultimate magazine theme for WordPress.

அனுமதி சீட்டு பெற நேரில் வர வேண்டாம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

அவசர அனுமதி சீட்டு பெற சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியால் பொதுமக்களுக்கு முன்கூட்டியே நிச்சயம் செய்த திருமணம், இரத்த சொந்தங்களின் அவசர மருத்துவ சிகிச்சை, இரத்த சொந்தங்களின் எதிர்பாராத விதமான மரணம் ஆகிய காரணங்களுக்கு மட்டும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வதற்கு அவசர பயண அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வந்தது.

அரசின் வழிகாட்டுதல் கடிதத்தின்படி, அவசர பயண அனுமதி சீட்டு வழங்கும் அதிகாரம் மாநில E-pass கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்டுள்ளதால், http://tnepass.tnega.org/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து பயண அனுமதி சீட்டினை பெற்றுக் கொள்ளுமாறு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

அவசர அனுமதி சீட்டு பெற சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு இனி பொதுமக்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.