Ultimate magazine theme for WordPress.

கொரோனா: சென்னையில் குணமடைந்தார் முதல் பத்திரிகையாளர் – எந்த பகுதியில் அதிகமான பாதிப்பு…?

சென்னையில் இதுவரை மொத்தம் 523 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. இதில், 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 145 பேரும், திருவிக நகரில் 85 பேரும், தடையார்ப்பேட்டையில் 65 பேரும், தேனாம்பேட்டையில் 55 பேரும், கோடம்பாக்கத்தில் 54 பேரும், அண்ணாநகரில் 45 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், வளசரவாக்கத்தில் 17 பேரும், அடையாறில் 18 பேரும், திருவொற்றியூரில் 14 பேரும், ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 8 பேரும், மாதவரத்தில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும், அம்பத்தூரில் 2 நபரும், மணலியில் 1 நபரும்பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்டலம் – மொத்தம் – உயிரிழந்தவர்கள் – குணமடைந்தவர்கள்
___திருவொற்றியூர் – 14 – 0 – 4
மணலி – 1 – 0 – 0
மாதவரம் – 3 – 0 – 3
தண்டையார்பேட்டை – 65 – 1 – 15
ராயபுரம் – 145 – 5 – 40
திருவிக நகர் – 85 – 3 – 26
அம்பத்தூர் – 2 – 0 – 0
அண்ணாநகர் – 45 – 3 – 18
தேனாம்பேட்டை – 55 – 0 – 13
கோடம்பாக்கம் – 54 – 0 – 19
வளசரவாக்கம் – 17 – 0 – 5
ஆலந்தூர் – 9 – 0 – 2
அடையார் – 17 – 0 – 4
பெருங்குடி – 8 – 0 – 7
சோழிங்கநல்லூர் – 2 – 0 – 2

சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 63.98% பேரும், பெண்கள் 36.02% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 109 பேருக்கும், 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 109 பேருக்கும் தொற்று உள்ளது.

குறைந்தபட்சமாக 80 வயதுக்கு மேல் 9 பேரும், 9 வயதுக்கு கீழ் நேற்று புதிதாக 4 பேருக்கு தொற்று ஏற்பட்டு 13 பேரும் பாதித்து உள்ளனர். 10 முதல் 19 வயதுள்ளோர் 42 பேருக்கும், 40 முதல் 49 வயதுள்ளோர் 91 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 81 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 48 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 20 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.