Ultimate magazine theme for WordPress.

கொரோனா – ஆறாவது இடத்திற்கு வந்த தமிழகம்… டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறிய கேரளா…!

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்பு 686 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4748 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் பாதிப்பு 6430ஐ கடந்துள்ளது. குஜராத்தில் 2624 பேரும், டெல்லியில் 2376க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் பாதிப்பு 1964ஐ நெருங்கியுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் 1699ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து சில நாட்களுக்கு முன் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம், 6வது இடத்துக்கு சென்றுள்ளது. இதேபோல் முதல் 10 இடங்கள் பட்டியலில் இருந்து கேரளா வெளியேறியுள்ளது. குஜராத் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.