Ultimate magazine theme for WordPress.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது: இந்திய ராணுவ தளபதி நரவானே குற்றச்சாட்டு..!

இந்தியாவும் உலகமும் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வரும் நேரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதாக இந்திய ராணுவ தளபதி ஜெனரல் நரவானே குற்றம்சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சென்று எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பார்வையிட்ட அவர், பாகிஸ்தான் இந்தியாவுக்கு தொல்லை கொடுத்து வருவதாக கூறினார். கடந்த சில நாட்களாக எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரின் தூத்நியால் என்ற இடத்தில் இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் நரவானே கூறியுள்ளார். அதன் பின்னர் உலக நாடுகள் முழுவதற்கும் இந்தியா மருத்துவக் குழுக்களை அனுப்பி வருகிறது. மேலும் தேவையான மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது.

ஆனால், பாகிஸ்தானோ பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பணியை செய்து வருகிறது. இது வரவேற்புக்கு உரியதல்ல என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.