Ultimate magazine theme for WordPress.

கொரோனா வைரசை அழிக்கும் புதிய கிருமிநாசினியை கண்டுபிடித்தது அண்ணா பல்கலைக்கழகம்

கொரோனா வைரசை அழிக்கும் வகையிலான புதிய கிருமி நாசினியை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி இன்று பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வர ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், தனிநபர் சுகாதாரம் முக்கிய பங்கி வகிக்கிறது.

அந்தவகையில், முககவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தலை வலியுறுத்தும் அதேவேளையில், இந்த வைரஸுக்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் முழு வீச்சில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் தேசிய சுகாதார கருவி வடிவமைப்பு மையம் நடத்திய ஆராய்ச்சியில், புதிய கிருமி நாசினி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மற்ற கிருமிநாசினிகள் மேற்பரப்பை மட்டும் சுத்தம் செய்யும் என்றும், புதிய கிருமிநாசினி, வைரஸின் முழு திறனையும் அழித்து, அதன் ஊடுருவலை தடுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கிருமிநாசினியை நாம் கைகளில், பாதுகாப்பு கவசங்கள், உபகரணங்களில் பயன்படுத்தலாம்.இது தொடர்பாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேவைகேற்ப உற்பத்தி செய்ய பெரிய நிறுவனங்கள், அரசுடன் இணைந்து கொரோனா பரவலை தடுக்க செயல்படவிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.