பணக்காரர்களால்தான் கொரோனா தமிழ்நாட்டுக்கு வந்தது: இழப்பீடு குறித்த கேள்விக்கு முதல்வர் பதில்
கொரோனா வைரஸ் பணக்காரர்களால் தான் தமிழ்நாட்டுக்கு வந்தது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்போது, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், கொரோனா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர், இது பணக்காரர்களுக்கு வந்த நோய் தான். ஏழைக்கு எங்கு வந்தது. கொரோனா வைரஸ் வெளிநாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் இறக்கப்பட்ட நோய் தான் என பதிலளித்தார். தமிழகத்தில் இவர்களால் தானே நோய் வந்ததே தவிர தமிழகத்தில் உருவாகவில்லை என பதிலளித்தார்.