10 நொடிகள் மூச்சை அடக்கினால் கொரோனா தொற்று இல்லை என்று பொருளா?
கொரோனா வைரஸ் பாதிப்பை விட, அது தொடர்பாக வதந்திகள் வேகமாக பரவி வருகின்றன. வெயிலில் கொரோனா பரவாது, பூண்டு உணவில் சேர்த்துக்கொண்டால் கொரோனா குணமாகும் என்றெல்லாம் வதந்திகள் பரவுகின்றது.
அதேபோல, 10 விநாடிகள் தொடர்ச்சியாக உங்களால் மூச்சை அடக்கி வைக்க முடிந்தால் கொரோனா தொற்று இல்லை என்றும், இருமல் இல்லை என்றாலும் கொரோனா இல்லை என்றும் தவறான தகவல்கள் பரவி வருகின்றன.