Ultimate magazine theme for WordPress.

கொரோனா அச்சத்தால் தயங்கிய சுகாதாரப் பணியாளர்கள்:களத்தில் இறங்கிய ரோஜா

கொரோனா அச்சத்தால் சுகாதாரப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்க முன்வராததால் சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா தூய்மைப் பணியில் களமிறங்கி அனைவரையும் அச்சரியப்பட வைத்தார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் நகரி தொகுதிக்குட்பட்ட வடமாலை பகுதியில் புதிதாக ஒருவருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்க நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சத்தால் சுகாதாரப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்க செல்லாமல் தயங்கி நின்றனர்.
இதனை கவனித்த அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொண்டு வீடு வீடாகச் சென்று கிருமி நாசினி தெளித்தார். அதன்பின் சுகாதாரப் பணியாளர்களும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.