Ultimate magazine theme for WordPress.

இந்தியா, இந்தியர்கள், பிரதமர் மோடிக்கு நன்றி…! டிரம்ப் நெகிழ்ச்சி ட்வீட்

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்குப் பின், இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி தடை செய்தது.

இதற்கிடையே, கொரோனாவால் 4 லட்சம் பேர் அமெரிக்காவில் பாதிக்கப்பட, உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா, அதிக அளவில் இந்திய நிறுவனங்களிடம் ஆர்டர் செய்திருந்தது.

உலகளவில் 70 % ஹைட்ராக்ஸிகுளுரோகுயின் மாத்திரைகளை இந்தியாதான் தயாரித்து விற்பனை செய்கிறது. குஜராத்தில் உள்ள முக்கியமான 4 மருந்து நிறுவனங்கள் இதை பெரும்பான்மையாக தயாரிக்கின்றன. 200எம்ஜி, 400 எம்ஜி அளவுகளில் மாதத்துக்கு சராசரியாக 40 டன் மாத்திரைகளை இந்தியா உற்பத்தி செய்கிறது.

இந்தியா விதித்த தடை காரணமாக சிக்கல் எழுந்ததால், பிரதமர் மோடியிடம் தடையை விலக்க டிரம்ப் வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும், இந்திய தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. ஏற்றுமதிக்கான தடையும் விலக்கப்பட வில்லை.

இதனால், “ இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைக்கான ஏற்றுமதித் தடையை விலக்காதது வியப்பளிக்கிறது. எதிர்காலத்தில் பதிலடி கொடுப்போம்” என டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இதனை அடுத்து, மனிதநேய அடிப்படையில் தேவைப்படும் நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசும் தெரிவித்தது.இந்த நிலையில், அமெரிக்காவின் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த டிரம்ப், “2.90 கோடிக்கும் அதிகமான ஹைட்ராக்ஸிகுளுரோகுயின் மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளன. நான் பிரதமர் மோடியிடம் பேசினேன். இந்தியாவிலிருந்து மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் அமெரிக்காவுக்கு வருகின்றன” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.