சிக்கன நடவடிக்கை தேவை; பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி 5 ஆலோசனைகள் கொண்ட கடிதம்
பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி எழுதி உள்ள கடிதத்தில், அரசு விளம்பரங்களை முற்றிலும் நிறுத்தவேண்டும் என்றும், புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தை கைவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர், குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் வெளிநாட்டு பயணங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
pmcares fund என்ற நிதிக்கு நன்கொடைகளை அளிப்பதற்கு பதிலாக பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு பணத்தை மாற்றும்படியும் ஆலோசனை கூறியுள்ளார். இதன்மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே உள்ள கட்டிடத்தில் நாடாளுமன்றம் செயல்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரதமர் கேட்டுக்கொண்டதை அடுத்து சோனியா காந்தி இந்த 5 ஆலோசனைகளை கூறியுள்ளார்.