தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு.. ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா கண்டுபிடிப்பு.. நெல்லைக்கு முதலிடம்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இவர்கள் அனைவருமே டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு ஒன்றில் பங்கேற்று விட்டு ஒரு திரும்பியவர்கள் தான் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். சென்னையில் இன்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பீலா ராஜேஷ். அப்போது அவர் அளித்த தகவலை பாருங்கள்:
சுவிட்ச் ஆப் டெல்லியில் ஒரு குழு இந்த மாதம் மத மாநாடு ஒன்று நடத்தியது. அதில் 1,500 பேர் பங்கேற்றனர். அதில் தமிழகத்துக்கு திரும்பியவர்களில் 1131 பேரில், நாங்கள் கண்டறிந்துள்ளது 523 பேர். அவர்கள் அனைவருக்கும், கையில் சீல் குத்தி, வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டி தனிமைப்படுத்தி உள்ளோம். அந்த மத குரூப்பில் வேறு யாராவது வந்துவிட்டு அதை அரசுக்கு தெரிவிக்காமல் இருந்தால் நீங்களே தானாக முன்வந்து அரசுக்கு தெரிவியுங்கள். ஏனெனில் நாங்கள் முயற்சி செய்து பார்த்தால், செல்போன் சுவிட்ச்ஆப் என்று வருகிறது. ஒருவேளை உங்களுக்கு அந்த பிரச்சனை இருந்தால் குடும்பத்தினருக்கும் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை உணருங்கள்.
புதிய நோயாளிகள் எண்ணிக்கையில் நெல்லைக்கு முதலிடம் மொத்தத்தில் தமிழகத்தில் 124 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாடு சென்றவர்கள் வீடுகளை சுற்றி மொத்தம் 8 கிலோமீட்டர் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார். 45 புதிய நோயாளிகள் எண்ணிக்கையில், 22 பேர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் தூத்துக்குடி மாவட்டம், 4 பேர் கன்னியாகுமரி மாவட்டம், 18 பேர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.