Ultimate magazine theme for WordPress.

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு

லண்டன் : இந்திய வங்கிகளில் கடன் வாங்கி, அவற்றை திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர், விஜய் மல்லையா, வங்கிகளின் வழக்கு செலவுக்காக, 1.8 கோடி ரூபாய் செலுத்தும்படி, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த மதுபான தொழிலதிபர், விஜய் மல்லையா, ‘கிங் பிஷர்’ விமான சேவை நிறுவனம் துவங்க, 13 வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பியோடினார். அவரை இந்தியா அழைத்து வர, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மல்லையா சொத்துகளை, சர்வதேச அளவில் முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, மல்லையா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த, லண்டன் நீதிமன்ற நீதிபதி, ஹென்ஸா, அந்த உத்தரவை ரத்து செய்ய மறுத்து விட்டார்.
மேலும், 13 வங்கிகள், கடனாக அளித்த பணத்தை திரும்ப வசூலிப்பதற்கான அதிகாரம், அந்த வங்கிகளுக்கு உள்ளது என, இந்திய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, லண்டன் நீதிபதி உறுதி செய்தார்.
இந்நிலையில், லண்டன் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘மல்லையாவின் சொத்துகளை முடக்குவதற்கான உத்தரவை, இந்திய வங்கிகள் பெற்றுள்ளன. ‘அவற்றின் வழக்கு செலவுக்காக, மல்லையா, 1.8 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.