Ultimate magazine theme for WordPress.

வேளாண்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள்; தமிழக அரசு!

ரூ.127.45 கோடி மதிப்பீட்டில், வேளாண்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது!
விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி அவர்கள் சட்டப்பேரவையில் அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில் நடப்பாண்டில் 50 கோடி ரூபாய் செலவில் சூரியசக்தி மோட்டார் பம்புசெட்டுகள் நிறுவப்படும் என தெரிவித்தார். அதேவேலையில் சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க 6 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், வாழை தோட்டத்தில் நுண்ணீர்ப் பாசன முறை அமைக்க விவசாயிகளுக்கு 27.83 கோடி ரூபாய் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி தோட்டக்கலை ஆராய்ச்சி பயிற்சி மையம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையம் ஆகியவற்றில் தோட்டக்கலை அறிவியல் சார்ந்த ஈராண்டு பட்டயப் படிப்பு தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
18 கோடி ரூபாய் செலவில், 9 வட்டாரங்களில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டப்படும் குறிப்பிட்டுள்ள அவர், நீலகிரி மாவட்டத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் 10 கோடி ரூபாய் செலவில் இருநூற்றாண்டு பசுமைப் புல்வெளி எனும் புதிய பூங்கா அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும்ர 500 வாகனங்களை நிறுத்தும் வகையில் 3 கோடி ரூபாய் செலவில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.