Ultimate magazine theme for WordPress.

வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

நாட்டின் புகழ்பெற்றவரும் , எழுத்தாற்றல், பேச்சுத்திறன் என பன்முகத்தன்மை கொண்டவர் வாஜ்பாய். 1996 முதல் 2004 வரை பிரதமராக இருந்தார். அவரது ஆட்சியில் நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நடந்தன. சிறந்த நிர்வாகியான இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது பிறந்த நாளான டிச. 25 ம் தேதி சிறந்த நிர்வாக நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. 2014ல் அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா வழங்கப்பட்டது.
பல ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்று வரும் அவர் இன்று டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு பிரபல மருத்துவர் ரஞ்சித்குலேரியா தலைமையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவரது உடல் நலம் தொடர்பான மருத்துவ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் அவருக்கு முழு அளவில் மருத்துவ பரிசோதனை நடப்பதாகவும், இது வழக்கமானதுதான் என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.