Ultimate magazine theme for WordPress.

நீட் தேர்வில் தமிழகத்தில் 39.55 சதவிகிதம் தேர்ச்சி -சி.பி.எஸ்.இ!

நீட் தேர்வு முழிவில் இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த மாணவி கீர்த்தனா 12-வது இடம் பிடித்துள்ளார்!
நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) CBSE நடத்தியது.
தமிழ் நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாட்டை தவிர வெளி மாநிலங்களிலும் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் கடும் அதிருப்தி அடைந்தனர். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ், இயற்கை மருத்துவம் போன்றவற்றுக்கான நீட் தேர்வுகள் கடந்த மே 6-ம் தேதி நடந்து முடிந்தது.
மே 6-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கான விடைகள் பட்டியல் சிபிஎஸ்இ இணையதளத்தில் கடந்த 25-ம் தேதி வெளியிடப்பட்டன. தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதியுள்ளனர்.
இந்நிலையில் முன்னதாக நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டபடும் என தெரிவித்திருந்த நிலையில் இன்று நீட் தேர்வு முடிவுகள் cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியானது.
இத்தேர்வில், 720-க்கு 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி என்ற மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 1,14,602 பேர் தேர்வு எழுதினர். அதில், சுமார் 45,336 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வில் தமிழகம் 39.55 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று இந்தியாவிலேயே 12-வது இடத்தை பிடித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.