Ultimate magazine theme for WordPress.

இந்தியா – சீன எல்லைகளை பாதுகாக்க தனி நிறுவனம்!

இந்தியா, சீனா நாடுகளினை இணைக்கு எல்லை பகுதிகளை பாதுகாக்க தனி நிறுவனம் ஒன்றை அமைக்கவுள்ளதாக நேபாளம் அறிவித்துள்ளது!
இந்த விவகாரம் குறித்து நேபாளம் நாட்டின் உள்துறை அமைச்சர் ராம் பகதூர் தாபா தெரிவிக்கையில்… “இந்தியா, சீனா எல்லைகளை பாதுகாக்கும் வகையில் ஒரு தனி அமைப்பு ஒன்றை நிறுவ நேபாள நாடு திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள பாதுகாப்பு படைகளால் எல்லா எல்லைப் பகுதிகளையும் மேற்பார்வையிட முடியாது என்றும் தற்போது நாட்டின் சர்வதேச எல்லையை நிர்வகிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நெடுங்காலமாக இந்தியா-வுடன் நட்புறவில் இருந்த நேபாளம், கடந்த சில ஆண்டுகளாக சீனாவுடன் நெருங்கி பழகி வருகிறது. அதற்கு பிரதிபலனாக சீனாவும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நேபாளத்தில் செய்து வருகிறது.
குறிப்பாக டோக்லாம், அருணாசல பிரதேஷ் எல்லைப் பிரச்னைகளை தொடர்ந்து சீனா நேபாளத்திற்கு பல்வேறு வழிகளில் ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையலில் தற்போது தற்போது தனி நிறுவனம் மூலம் எல்லைகளை கண்காணிக்க அமைப்பு ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் நேபாளத்தில் அதன் சர்வதேச எல்லையை மேற்பார்வையிட தனி பாதுகாப்பு நிறுவன அமைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.