Ultimate magazine theme for WordPress.

துப்பாக்கிச்சூடு தொடர்பான அறிக்கையை 3-மாதத்தில் தாக்கல் செய்ய உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக திங்கட்கிழமை விசாரணையை தொடங்குகிறார் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
இதை எதிர்த்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை செய்து வருகிறது. இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வரும் திங்கட்கிழமை விசாரணையை தொடங்குகிறார் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை 3 மாதத்திற்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது!

Leave A Reply

Your email address will not be published.