மானிய சிலிண்டர் விலை ரூ.2.42 உயர்வு
புதுடில்லி : மானிய சிலிண்டர் விலை ரூ.2.42 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மே மாதம் ரூ.479.42 க்கு விற்கப்பட்ட 14.2 கிலோ சிலிண்டரின் விலை தற்போது ரூ.481.84 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டில்லியில் மானிய சிலிண்டரின் விலை ரூ.493.55 ஆகவும், கோல்கட்டாவில் ரூ.496.65 ஆகவும், மும்பையில் ரூ.491.31 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.