Ultimate magazine theme for WordPress.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம்: எடப்பாடி!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான வழங்கப்பட்ட நிவாரண நிதியை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பலத்த காயமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியை 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளதால் அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இது குறித்து, பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களுடைய கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கான நிவாரணம் ரூ.10லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரித்துள்ளாதாகவும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், துப்பாக்கிச்சூட்டில் 13பேர் உயிரிழந்தது சம்பவம் மிகுந்த துயரமும், மனவேதனையும் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கப்படும், என்று தெரிவித்திருந்தநிலையில், தற்போது ரூ.20 லட்சமாக அதிகரித்துள்ளாதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:Thoothukudi Government of Tamil Nadu Sterlite sterlite protest Tamilnadu

Leave A Reply

Your email address will not be published.