Ultimate magazine theme for WordPress.

தொழிலாளர்களைப் பாதுகாக்க பால்கனி அரசுகள் தெளிவாக முடிவெடுக்க வேண்டும் – கமல்ஹாசன் காட்டம்

தொழில்முனைவோரையும் தொழிலாளர்களையும் பாதுகாப்பதில் பால்கனி அரசுகள் தெளிவான முடிவெடுக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார ரீதியில் இந்தியா பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அதனையடுத்து, சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாடு அரசு, மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதிக்கும் எதையும் செய்ய கூடாது என்கிறார் பிரதமர்.ஆனால் மத்திய,மாநிலஅரசுகள் தனது ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்றத்தையும் ஈட்டிய விடுப்பையும் முடக்குகின்றன. தொழில்முனைவோரையும் தொழிலாளரையும் பாதுகாப்பதில் தெளிவான முடிவெடுக்கவேண்டும் பால்கனி அரசுகள்

Leave A Reply

Your email address will not be published.