Ultimate magazine theme for WordPress.

திருந்துங்க பிரதர்ஸ்… அஜித் – விஜய் ரசிகர்களுக்கு நடிகை அட்வைஸ்!

அடிக்கடி ட்விட்டரில் யுத்தம் நடத்தும் அஜித் – விஜய் ரசிகர்களுக்கு நடிகை கஸ்தூரி அட்வைஸ் செய்துள்ளார்.

அஜித் – விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ஒருவர் மாறி ஒருவர் நடத்தும் அநாகரீக வார்த்தை யுத்தம் பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது. இதை கவனித்த விஜய், அஜித் இருவரும் இவ்வாறான செயல்களில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் என்று கூறினாலும் ரசிகர்கள் நிறுத்தியபாடில்லை.

சமீபத்தில் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் நடத்திய ஹேஷ்டேக் சண்டை குறித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரி, “அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம் . ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ். எதிர்மறையான எண்ணங்களை புறந்தள்ளுங்கள் (Ignore negativity). வாழு வாழ விடு” என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.