EBM News Tamil
Leading News Portal in Tamil

நடிகர் விக்ரமுக்கு பிறந்தநாள் கிஃப்ட் கொடுத்த கோப்ரா பட இயக்குநர்!

நடிகர் விக்ரமின் பிறந்தநாள் நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஸ்பெஷல் காமன் டிபியை வெளியிட்டுள்ளார்.

தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தனது 54-வது பிறந்தநாளை நாளை கொண்டாட இருக்கிறார். இதை முன்னிட்டு விக்ரமின் பர்த்டே காமன் டிபியை இயக்குநர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ளார். இதைக் கவனித்த விக்ரமின் ரசிகர்கள் அதை ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பெறச் செய்தனர்.

நடிகர் விக்ரம் கடாரம் கொண்டான் திரைப்படத்தை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் 7 கெட்டப்புகளில் விக்ரம் காட்சியளித்திருந்தார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் நாளை விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகுமா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.